×

ஈரோட்டில் பொதுமக்களை தாக்க முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்மஅடி

ஈரோடு, டிச.25: ஈரோட்டில் பொதுமக்களை கல்வீசி தாக்க முயன்ற வடமாநில வாலிபரை கட்டி வைத்து மக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கரூர் பைபாஸ் ரோடு கொல்லம்பாளையம் அருகே நேற்று அதிகாலை வடமாநில வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அப்போது, அந்த வாலிபர் அங்கிருந்த பெண்களிடம் இந்தியில் முகவரி கேட்பது போல ஏதோ பேசினார். மொழி தெரியாததால் அந்த நபரை அங்கு இருந்து செல்லுமாறு பெண்கள் கூறினர்.

ஆனால், அந்த நபர் தொடர்ந்து அங்கேயே சுற்றித்திரிந்தார். மேலும், அவர் அந்த வழியாக பைக்கில் வருபவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த நபருக்கு பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது அவர், கீழே கிடந்த கற்களை எடுத்து வீசி பொதுமக்களை தாக்க முயன்றார். இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை மடக்கி பிடித்து கை, கால்களை கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார், பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`படுகாயம் அடைந்த அந்த வாலிபர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் யார்? எதற்காக அந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சிகிச்சைக்கு பிறகு தான் அவரிடம் முழுமையான விசாரணை நடத்தப்படும்’ என்றனர்.

Tags : attack ,Dharmadi ,civilians ,Northern Territory ,Erode ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது