×

தாளவாடி மலைப்பகுதியில் தேங்காய் நார் ஆலையில் தீ விபத்து

சத்தியமங்கலம், டிச.25: தாளவாடி மலைப்பகுதியில் தேங்காய் நார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி பாரதிபுரத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமாaன தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் தேங்காய்மட்டையில் இருந்து நாரை பிரித்தெடுத்து கயிறாக தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நார் உற்பத்தி எந்திரத்தில் இருந்து மின்கசிவு காரணமாக தேங்காய்நாரில் தீப்பிடித்தது. தீ மள மள வென பரவி ஆலை முழுவதும் பரவியது. இதுகுறித்து ஆசனூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Tags : coconut fiber plant ,Thalawady Hills ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் தேங்காய் நார் ஆலையில் தீ விபத்து