சத்தியமங்கலம், டிச.25: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்வதோடு சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது வழக்கம். வெள்ளை அடிப்பதற்காக ஒயிட் சிமெண்ட், கிளிஞ்சல் சுண்ணாம்பு, கல் சுண்ணாம்பு பயன்படுத்துவது வழக்கம்.இதில், கல் சுண்ணாம்பை விட கிளிஞ்சல் சுண்ணாம்பு வெண்மை நிறத்தில் உள்ளதால் கிளிஞ்சல் சுண்ணாம்பை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பண்டிகைக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது சத்தியமங்கலம் வாரச்சந்தையில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை நடந்து வருகிறது.