×

பூத் சிலிப் விநியோகிக்கும் பணி 60% நிறைவு

ஈரோடு, டிச. 25: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகிக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் பார்வையாளர் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து, வாக்குபதிவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று வரை 60 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. நாளை மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்படும்.

இது குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் கூறியதாவது:
முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் வாக்குபதிவுக்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. வாக்குசாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இதை அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உறுதி படுத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கான பூத் சிலிப் விநியோகிக்கும் பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், வட்டார வள அலுவலர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். பூத் சிலிப் வழங்கும் பணி, 60 சதவீதத்தை தாண்டி உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் இப்பணியினை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத பணிகளும் இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டு விடும். பூத் சிலிப் மொத்தமாக, குறிப்பாக அரசியல் கட்சிக்காரர்களிடம் கொடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று சம்மந்தப்பட்ட வாக்காளரிடம் தான் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : 60% ,Booth Chile ,
× RELATED சென்னை விஐடி பல்கலைக்கழக தினவிழா...