×

அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்

வி.கே.புரம், டிச. 25: மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏராளமான அருவிகள் உள்ளன. களக்காடு பகுதியில் உள்ள அருவிகளில் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் விழும். குற்றால அருவிகளில் சீசன் காலங்களிலும், மழை காலங்களிலும் தண்ணீர் விழும்.
ஆனால் ஆண்டு முழுவதும் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் மட்டுமே தண்ணீர் விழும். இதனால்     நாள்தோறும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.பாபநாசத்தில் இருந்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல அரசு பஸ் வசதி கிடையாது. சுற்றுலா பயணிகள், தாங்கள் வரும் வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் சென்று வருகின்றனர். அருவிக்கு செல்லும் சாலை முழுவதும் 1 கிமீ தூரத்திற்கு குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. தற்போது பெய்த பருவமழையின் காரணமாக சாலை, மேலும் மோசமாகி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும்  உள்ளது. இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலையை சம்பந்தப்பட்ட வனத்துறையினர் சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Agastya Falls ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி