×

கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்

அம்பை, டிச. 25:  கல்லிடைக்குறிச்சி மற்றும் மணிமுத்தாறு பேரூராட்சிகளில் டெங்கு கொசு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகளை நெல்லை துணை கலெக்டர் (பயிற்சி) அனிதா ஆய்வு மேற்கொண்டார்.நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவுரைப்படி கல்லிடைக்குறிச்சி மற்றும் மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. கல்லிடைக்குறிச்சி பகலி கூத்தர் தெரு, சத்திரம் தெரு மற்றும் மணிமுத்தாறு அண்ணா நகர் போன்ற பகுதிகளில் நடந்து வரும் பணிகளை துணை கலெக்டர் (பயிற்சி) அனிதா பார்வையிட்டார்.வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், குடிநீரில் குளோரின் அளவு, கொசுப்புழு ஒழித்தல், டெங்கு கொசு தடுப்பு புகைமருந்து அடித்தல் போன்ற டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

 மேலும் வீடுகளில் மூடி வைக்கப்பட்ட நல்ல தண்ணீரில் கொசுப்புழுக்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.ஆய்வின்போது அம்பை தாசில்தார் கந்தப்பன், செயல் அலுவலர்கள் கல்லிடைக்குறிச்சி சுலைமான்சேட், மணிமுத்தாறு காளியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கணேஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED மயங்கி விழுந்த கடை உரிமையாளரிடம் நகை பறிப்பு