×

டாணா பகுதியில்புதிய அணை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

நெல்லை, டிச. 25:  நெல்லை அருகே உள்ள மானூர் பெரியகுளம், 8ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் சீவலமாறபாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது. 1120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மானூர் பெரியகுளம், தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் சிற்றாற்றில் பெருக்கெடுத்த தண்ணீர் மூலம் நிரம்பி மறுகால் பாய்கிறது. மறுகால் பாயும் தண்ணீரில் பகுஜன்சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், இளைஞரணி அமைப்பாளர் பழனி, நெல்லை சட்டமன்ற பொருளாளர் பலவேசம், மானூர் பகுதி தலைவர் மணி ஆகியோர் பூக்கள் தூவி வரவேற்றனர்.

பின்னர் தேவேந்திரன் கூறுகையில், மானூர் பெரியகுளத்துக்கு சிற்றாற்றில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. வானம் பார்த்த பூமியாக மாறியுள்ள மானூர் பகுதியை வளம் கொழிக்க செய்ய மானூர் குளம் ஆண்டுதோறும் நிரம்பும் வகையில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக திட்டமிடப்பட்ட டாணா பகுதியில் அணைக்கட்டும் பணியை விரைந்து துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணை கட்டப்பட்டு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டால் மானூர் பெரியகுளம், பள்ளமடை குளம், ங்கைகொண்டான்குளம், கைலாசபுரம்குளம், கொடியன்குளம், பரிவல்லிக்கோட்டை குளம் வழியாக விளாத்திகுளம் வரையுள்ள குளங்கள் நிரம்பும். இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.






Tags : area ,Dana ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி