×

எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

வாலாஜாபாத், டிச.25: மறைந்த முதல்வரும்,  அதிமுக நிறுவனருமான  எம்ஜிஆரின் 32வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு நேற்று அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், ஏக்கனாம்பேட்டை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து  அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் அதிமுக அமைப்பு செயலாளர் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜன், ஜீவானந்தம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் வரதராஜுலு, பேரூராட்சி செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Introverts ,
× RELATED புதூரில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்