×

மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே செயின் பறித்த வாலிபருக்கு தர்மஅடி

செங்கல்பட்டு, டிச. 25; மறைமலைநகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் தமிழரசி (23). கூடுவாஞ்சேரியில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் மாலை தமிழரசி, வேலைக்கு செல்ல, மறைமலைநகர் ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர், தமிழரசியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார்.இதனால், அதிர்ச்சியடைந்த தமிழரசி, ஒரு கையில் செயினை பிடித்து கொண்டு அலறி கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளும், பொதுமக்களும் ஓடிவந்து,  வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை மறைமலைநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவன் (23). ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Chaitanya Chaitanya ,Maramalai Nagar Railway Station ,
× RELATED 23 டன் குட்கா தீ வைத்து எரிப்பு