×

திருவண்ணாமலையில் பிடிஓ அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் பணி தேர்தல் பார்வையாளர் ஆய்வு

திருவண்ணாமலை, டிச.25: உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் பணி திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சுந்தரவள்ளி ஆய்வு செய்தார்.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நாளை மறுதினம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான பொருட்கள், வாக்கு பெட்டிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான வாக்களார் பட்டியல், உள்ளிட்டவகைகள் தனி தனியாக பிரிக்கும் பணிகள் நேற்று நடந்தது. மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது, வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டு உள் பகுதியினை தூய்மை செய்தும், பெட்டியின் பூட்டு பகுதி சீரமைக்கும் பணி 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், பிடிஓ அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட தேர்தல் பார்வையாளர் சுந்தரவள்ளி, அதிகாரிகளிடம் தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும், ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.அதைத்தொடர்து வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் அறைக்கு சென்று வாக்குப்பெட்டிகள் பழுது இன்றி தூய்மையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக என்பதை ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் நாளை மாலைக்குள் அந்தந்த மையத்திற்கு தனி தனியாக பிரித்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, பிடிஓக்கள் அண்ணாதுரை, ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Election Observer Inspection ,Thiruvannamalai ,PDO Office ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...