×

சாத்தான்குளம் வட்டாரத்தில் தராசுகளில் முத்திரை புதுப்பித்தல் துவக்கம்

சாத்தான்குளம், டிச. 25: சாத்தான்குளத்தில் டிச. 30ம்தேதி வரை வியாபாரிகள் எடை, எலக்ட்ரானிக் தராசுகளில் முத்திரையை புதுப்பித்துக்கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆய்வாளர் விசுவநாதன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள  வியாபாரிகள் மற்றும் வியாபார தொழிலாளர்களின் தராசு, படிக்கட்டுகளில் முத்திரை புதுப்பிக்கும் முகாம்  தொடங்கியது. இம்முகாம் டிச. 30ம்தேதி வரை சாத்தான்குளம் நாசரேத் சாலையில் உள்ள  தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில்  நடக்கிறது. எனவே  சாத்தான்குளம் வட்டார வியாபாரிகள் மற்றும்  வியாபார தொழிலாளர்கள் தங்களது தராசு, படிக்கட்டுகள், மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை கொண்டு வந்து அதில் முத்திரையை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இந்த முகாம் மூலம்  வியாபாரிகள்  பயன்பெறலாம் என தொழிலாளர் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Tags : Launch ,Sathankulam Circle ,
× RELATED சூரியை சுத்து போட்டு கலாய்த்த SK & VJS..! - Fun Speech at Garudan Audio Launch | Dinakaran news.