எட்டயபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

எட்டயபுரம், டிச. 25: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 32வது நினைவுதினம் எட்டயபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி  எட்டயபுரம் நடுவிற்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு  தூத்துக்குடி மாவட்ட அதிமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சந்திரன்,  எட்டயபுரம் நகர அதிமுக செயலாளர் ஆழ்வார் உதயகுமார் தலைமையில் கட்சியினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நகரில் மேலவாசல்,  கீழவாசல், பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் எம்ஜிஆர் படத்திற்கும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கோவில்பட்டி ஒன்றிய அம்மா பேரவை இணைச்செயலாளர் மாரிமுத்து பாண்டியன், இளைஞர் அணி நகரச் செயலாளர் ஜெயக்குமார், மகளிர் அணி நகரச் செயலாளர் சாந்தி, 15வது  வார்டு செயலாளர் மாரியப்பன், பாரதி மில் சிவநாதன், நடராஜன், பாண்டி உள்ளிட்ட  கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>