×

கீழ்வேளூர் அருகே தேவூரில் எய்ட்ஸ் தின விழா

கீழ்வேளூர், டிச.25: நாகை மாவட்டம் தேவூரில் நேருயுவகேந்திரா, நாகலூர் அம்பேத்கார், பெரியார் மார்க்ஸ் இளைஞர் மன்றம் இணைந்து உலக எய்ட்ஸ் தின விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தமிழ்பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மணிவாசம் தலைமை தாங்கினார். நேருயுவகேந்திரா ஜெயந்தி முன்னிலை வகித்தார். ஜெயசீலன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருதானி, துளசி, வேப்பிலை, சோற்று கற்றாழை, நிலவேம்பு குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கேசவராஜ், சித்த வைத்தியர் அஜ்மல்கான், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : AIDS Day Ceremony ,Devoor ,Keezhveloor ,
× RELATED மேட்டூர், தேவூர் பகுதியில் காவிரி நீரை...