×

உள்ளாட்சி தேர்தலில் மீனவர் பேரவை போட்டியிடாத இடங்களில் சிவசேனா போட்டி

நாகை,டிச.25: உள்ளாட்சி தேர்தலில் அகில பாராத மீனவர் பேரவை போட்டியிடாத இடங்களில் சிவசேனா போட்டியிடும் என பாஜ இல்லாத மற்ற இந்து இயங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாகை மாவட்ட பாஜ இல்லாத மற்ற இந்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் நடந்தது.சிவசேனா கட்சி மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை வகித்தார். அகில பாரத இந்து மகா சபை மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, சிவசேனா கட்சி ஒன்றிய தலைவர் நீதிபதி, அகில பாரத மீனவப்பேரவை இளைஞர் அணி மாவட்ட தலைவர் குட்டிபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா, அகில பாரத இந்து மகா சபா, அகில பாரத மீனவர் பேரவை போட்டியிடாத இடங்களில் போட்டியிடும் இந்து மக்கள் கட்சிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பது. சிவசேனா, இந்து மக்கள் கட்சி, அகில பாரத இந்து மகா சபா, அகில பாரத இந்து மீனவர் பேரவை போட்டியிடாத இடங்களில் போட்டியிடும் நமது கட்சியிடம் ஆதரவு கேட்டு சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது. இந்து இயக்கங்களின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் யார் என்பதை இன்று(25ம் தேதி) உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து வரும் 31ம் தேதி மாலை நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : contests ,Shiv Sena ,fishermen ,government ,elections ,
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு