×

நீடாமங்கலம் அடுத்த பொதக்குடியில் கால்நடை மருந்தகத்திற்கு வாரத்தில் ஒருமுறை மட்டுமே வரும் மருத்துவர்

நீடாமங்கலம், டிச.25:நீடாமங்கலம் அடுத்த பொதக்குடியில் கால்நடை மருந்தகத்திற்கு வாரத்தில் ஒருமுறை மட்டுமே மருத்துவர் வருவதால் கால்நடை பராமரிப்போர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பொதக்குடி சி பஜாரில் கால்நடை மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அருகே உள்ள அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், சேகரை, அகரபொதக்குடி, ஆய்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கும், கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய்களுக்கும் முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது வழக்கம்.இந்நிலையில் இந்த கால்நடை மருத்துவமனைக்கு வரும் மருத்துவர் வாரத்தில் ஒருமுறை வருவதாகவும், சில வாரங்களில் வருவதில்லை என அப்பகுதி கால்நடைகள் பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மருத்துவமனைக்கு மாடுகளுக்கு சினை ஊசிபோட சென்றவர்கள் மருத்துவர் இல்லாததால் வெளியூர்களுக்கு கால்நடைகளை ஓட்டி சென்று சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்குபணியாற்றும் கம்பவுன்டர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் விபத்துகள் சிரிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து கொடுத்து அனுப்பி விடுகின்றனர். சினை ஊசி போடும் கால்நடைகளுக்கு டாக்டர்தான் ஊசி போட வேண்டும்.எனவே தற்போது கால்நடைகளுக்கு கோமாரி போன்ற நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. சி பஜாரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு வாரத்தில் மூன்று முறையாவது மருத்துவர் வருவதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி தமுமுக வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : doctor ,Nedamangalam ,Pothukudi ,
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...