×

சிஎஸ்ஐ பிஷப் செல்லையா

கன்னியாகுமரி சிஎஸ்ஐ பிஷப் செல்லையா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:இறைமகன் இயேசு கிறிஸ்து திருப்பெயரில் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மேசியா என்ற எதிர்நோக்கு இயேசுவில் நிறைவேற்ற இறைவன் எடுத்த உன்னத திட்டமே கிறிஸ்து பிறப்பு. எபிரேயத்தில் மேசியா என்ற வார்த்தை கிரேக்கத்தில் கிறிஸ்து என்று பொருள்படுகிறது. இயேசு என்று பெயரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றார். எனவே இயேசு கிறிஸ்து என்ற பெயரின் பொருளை இரட்சகர், மீட்பர், விடுதலையாளர் என்பதில் புரிந்துகொள்ள முடிகிறது.

வாழும் உலகில் இறைவனின் விடுதலை திட்டத்தை அவரோடு இணைந்து செயல்படும் இறை மக்களாய், இறையாளுகை பல தீமையில் இருந்து நன்மைக்கும், அநீதிக்கும் நீதிக்கும் அச்சுறுத்தலாய் இருந்து தூய்மைக்கும், அழிவில் இருந்து வாழ்வுக்கும், அமைதியற்ற நிலையில் இருந்து அமைதிக்கும், குறைவில் இருந்து முழுமைக்கும், பொறுமையில் இருந்து செயல்பட இறைவன் நம்மில் ஒருவராக வந்த மனிதர்களை சந்தித்த நிகழ்வாகவே கிறிஸ்து பிறப்பின் மைய செய்தி. இந்த நற்செய்திகளை உலகுக்கு இறைவன் அறிவிக்கும் கருவியாக பயன்பட இயேசுவை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவோம். இறையாசி நம்மோடு என்றும் தங்கியிருப்பதாக. இவ்வாறு வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CSI Bishop ,
× RELATED காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சி.எஸ்.ஐ. பிஷப்பிடம் ஆதரவு திரட்டினார்