×

குமரியில் காங். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கே.எஸ்.அழகிரி, முகுல்வாஸ்னிக் இன்று பிரசாரம்

நாகர்கோவில், டிச.24: குமரியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கே.எஸ்.அழகிரி, முகுல்வாஸ்னிக் இன்று பிரசாரம் செய்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று (24ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குமரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் களியக்காவிளை வழி குழித்துறை வரும் அவர்கள் மாலை 3.30 மணிக்கு கழுவன்திட்டையிலும், 4.30க்கு தேங்காப்பட்டணம், 5.30 மணிக்கு ஈத்தாமொழி ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுகின்றனர். இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Kumari ,campaigning ,Mukulwasnik ,KS Alagiri ,coalition candidates ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!