×

பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.24: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் பால்ராஜ், பச்சை தமிழகம் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். பச்சை தமிழகம் தலைவர் சுப.உதயகுமார் தொடங்கி வைத்தார். தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் திருத்தமிழ் தேவனார், விவசாய அணி தலைவர் வேதக்கண் மற்றும் போஸ், மேரி ஸ்டெல்லா, தனுஷ், ரவி, தனபால், ஆசீர் தங்கராஜ், ஆன்டன் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Anti-fascist Alliance ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்