×

கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் 6.98 லட்சம் வாக்காளர்கள்

கோவில்பட்டி, டிச. 24: கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்  சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை ஆர்டிஓ விஜயா வெளியிட்டார். இதில் மொத்தம் 6.98 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ விஜயா நேற்று வெளியிட்டார். இதில் விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 2546 ஆண்கள், 1 லட்சத்து 5950 பெண்கள், பிறர் 2 பேர் என மொத்தம் 2 லட்சத்து 8498 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1, 15,509 ஆண்கள், 1,19, 626 பெண்கள், பிறர் 16 பேர் என மொத்தம் 2,35, 151 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கோவில்பட்டி தொகுதியில் 1,25,030 ஆண்கள், 1,29, 993 பெண்கள், பிறர் 27 பேர் என மொத்தம் 2,54, 990 பேர் என 3 தொகுதிகளிலும் ஆண், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 98 ஆயிரத்து 639 வாக்காளர்கள் உள்ளனர். நிகழ்ச்சியில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ரகுபதி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு தாசில்தார்கள் மணிகண்டன், ராஜ்குமார், ரகு, பாஸ்கரன் , கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி, நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன்,  நகர அவைதலைவர் முனியசாமி, பாமக மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, நகர கருப்பசாமி, அமைப்புச் செயலாளர் காளிராஜ், மாவட்ட தலைவர் மாடசாமி, நாம் தமிழர் கட்சி மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ரவிக்குமார், தொகுதி செயலாளர் ராஜேஸ்கண்ணா, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : voters ,constituencies ,Kovilpatti ,Ottapidaram ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...