×

கொடுமுடி அருகே லட்சுமிபுரத்தில் தென்காசி திமுகவினர் வாக்குசேகரிப்பு

தென்காசி, டிச. 24: கொடுமுடி அருகே லட்சுமிபுரத்தில் தென்காசி திமுகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்நாதன் தலைமையில் தென்காசி மாவட்ட திமுகவினர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் இச்சிபாளையம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சின்னசாமி, மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் கஸ்தூரி, ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் யசோதா, ஊராட்சி தலைவர் வேட்பாளர் ராஜ்குமார், பகுதி செயலாளர் அக்னி சந்திரசேகர், மாணவரணி தர், பேச்சாளர் ஈரோடு இளையகோபால், கலை இலக்கிய பேரவை பொன் பூபதி, நகர வார்டு செயலாளர் கணேசன், சசிகுமார், ஜெயக்குமார், ஜெகதீசன், சீனி துரை, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tenkasi DMK ,Lakshmipuram ,Kodumudi ,
× RELATED கோவை ஆவாரம்பாளையத்தில் நின்றுகொண்டிருந்த காரில் தீ