×

உத்தமபாளையம் கல்லூரியில் ரத்ததான முகாம்

உத்தமபாளையம், டிச.24: உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செந்தல்மீரான் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் தர்வேஷ்மைதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் முகமதுமீரான் வரவேற்றார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தமிழ்வாணன் தொடங்கி வைத்தார். இதில் தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 102 யூனிட் ரத்தம் மாணவர்களால் வழங்கப்பட்டது. இதில் என்.எஸ்.எஸ்.அதிகாரிகள் பேராசிரியர்கள் சீதாராமன், முகமதுகபீர், முகமதுஇர்ஷாத், கவிமணி, நஷ்ரீன்பானு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Raththamana Camp ,Uthamapalayam College ,
× RELATED பொதுமக்கள் புகார் உத்தமபாளையம்...