×

அமைச்சர் பாஸ்கரன் திருப்புவனத்தில் பிரச்சாரம்

திருப்புவனம், டிச.24: திருப்புவனம் ஒன்றியத்தில் இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 17 ஒன்றிய உறுப்பினர்கள், 45 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தல் 27ம் தேதி நடக்க உள்ளது. 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு 11 பேரும், 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிகளுக்கு 73 பேரும் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு கட்சி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கும், 9 ஒன்றிய உறுப்பினர்களுக்கும் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து கதர் தொழில் வாரிய அமைச்சர் பாஸ்கரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வடகரை, மடப்புரம் பூவந்தி, அல்லிநகரம், மேலராங்கியம், கீழராங்கியம், அச்சங்குளம், சங்கங்குளம், ஆனைக்குளம், பத்துபட்டி, திருப்பாச்சேத்தி உட்பட  பல்வேறு கிராமங்களில் அமைச்சர் பாஸ்கரன் பிரச்சாரம் செய்தார். அவருடன் மாவட்டசெயலாளர் செந்தில்நாதன்,  மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள் கொத்தங்குளம் கருப்பையா, பாக்யலட்சுமி, ஒன்றிய செயலாளர் கணேசன், தமாகா மாவட்ட தலைவர்   பாலசுப்பிரமணியன், அயோத்தி உட்பட கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Campaign ,Baskaran Thiruvavanam ,
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...