×

திருப்புவனம் அருகே கோர்ட் உத்தரவுப்படி கண்மாயை ஆக்கிரமித்த தென்னந்தோப்பு அகற்றம்

திருப்புவனம், டிச. 24: ேகார்ட் உத்தரவுப்படி திருப்புவனம் அருகே வாவியேரந்தல் கண்மாயை ஆக்கிரமித்து இருந்த தென்னந்தோப்பு அகற்றப்பட்டது.
திருப்புவனம் அருகே வாவியரேந்தல் கண்மாய் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன்மூலம் மூலம் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்தின்றி கண்மாய் வறண்டு கிடக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக கண்மாயில் தனியார் சிலர் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பு வைத்து ஆக்கிரமித்து வந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள்  தென்னந்தோப்பை அகற்ற மறுத்து மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த சில நாட்களுக்குமுன்னர் குறிப்பிட்ட கண்மாயில் உள்ள தென்னந்தோப்பை வெட்டி அகற்ற நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதன்படி ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள 480 தென்னை மரஙகள் அகற்றும் பணி நடந்தது. திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சிங்காரவேலு, திருப்புவனம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமயிலான போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Thirupavanam ,
× RELATED திருப்புவனத்தில் பொதுமக்கள்...