×

கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பிரசாரம் துவக்கினார் மதுரை எம்பி

மேலூர், டிச. 24:   உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மதுரை எம்பி வெங்கடேசன் ஆதரவு திரட்டினார். மதுரை மாவட்ட எம்பி வெங்கடேசன் நேற்று மேலூர் வந்தார். தும்பைப்பட்டியில் உள்ள கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். மதுரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்காக 6வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜராஜன் மற்றும் 19வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமிக்கு இவர் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். உடன் புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தாலுகா செயலாளர் கண்ணன், கமிட்டி உறுப்பினர்கள் ராஜேஸ்வரன், அடக்கிவீரணன், மணவாளன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், திமுக ஊராட்சி செயலர் தங்கையா உட்பட கட்சியினர் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Madurai ,campaign ,idol ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...