×

பாளையத்தில் பள்ளி அருகே பன்றி வளர்ப்பு குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம்

குஜிலியம்பாறை, டிச. 24: குஜிலியம்பாறை ஒன்றியம், பாளையம் வாரச்சந்தை நடைபெறும் மெயின்ரோட்டில் அங்கன்வாடி மையம் மற்றும் தனியார் நர்சரி பள்ளி உள்ளது. அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகளும், தனியார் நர்சரி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும் படிக்கின்றனர். அங்கன்வாடி மையம், நர்சரி பள்ளியை ஒட்டியவாறு வறட்டாறு ஒன்று செல்கிறது. பாளையம் மெயின்ரோட்டில் உள்ள கோழிக்கடை, மீன்கடை, ஆட்டிறைச்சி கடை, டீக்கடை, ஹோட்டல் ஆகியவற்றில் இருந்து வெளியேரும் கழிவுபொருட்கள், வாரச்சந்தை கழிவு பொருட்கள் என ஒட்டுமொத்த கழிவுகளையும் இந்த வறட்டாற்றிலேயே கொட்டப்படுகிறது. இதனால் இந்த வறட்டாறு முழுவதும் கழிவுநீர் மற்றும் கழிவு பொருட்களால் நிரம்பி நிற்பதால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

Tags : piglets ,school ,Palayam ,
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய