×

மண்பானை செய்ய ஏரிகளில் இருந்து களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

கும்மிடிப்பூண்டி, டிச. 24: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் துரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர்களில் சிலர் கடந்த 40 வருடங்களாக மண்பானை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு மண்பானை செய்யும் பணியை மும்மரமாக மேற்கொண்டிருக்கின்றனர். இவர் அகல்விளக்கு, சட்டி, சிறிய பானை, பெரிய பானை, உள்ளிட்ட நான்கு வகையான மண்பானைகளை செய்துவருகிறார்.
இதன் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மண்பானை செய்வதற்கான களிமண்ணிற்கு பெரும் கட்டுப்பாட்டு இருந்து வருகிறது. வருடந்தோறும் சுற்றுப்புறங்களில் மண்பானை செய்துவரும் தொழிலாளிகள் கவரப்பேட்டை அடுத்த கிளிகோடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்கின்றனர். ஆனால் இதற்கு அதிகாரிகள் கடும் கட்டுப்பாடு விதிப்பதாக மண் பானை தொழிலாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மண்பானை தொழிலாளிகள் கூறுகையில், “நாங்கள் மண்பானை செய்ய கவரப்பேட்டை அடுத்த கிளிகோடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இருந்து களிமண் எடுத்து வந்து மண்பானை செய்து விற்பனை செய்கிறோம். ஆனால் இதற்கு அரசாங்கம் வருடத்திற்கு ஒருமுறை தான் இந்த பகுதியில் களிமண் எடுக்கவேண்டும் என்று கடும் கட்டுப்பாடு விதிக்கிறது. மேலும், விஏஓ, தாசில்தார், கலெக்டர், ஆர்டிஓ உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் அலைந்து திரிந்து கையொப்பம் வாங்கிய பின்னர் தான் மண்பானை செய்து விற்கப்படுகிறது. இதனால் குறைந்த லாபமே பெறுகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்குதடையின்றி களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி அனுமதி கிடைத்தால் எங்களுக்கு லாபம் பெருகும்” என வேதனையுடன் கூறினர்.

Tags : lakes ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...