பாதுகாப்பு ஏற்பாடுகளும் மும்முரம் கோடியக்கரையில் எச்சரிக்கை பலகை அமைப்பு அரிமளம் அருகே ராயவரம்-பெருங்குடி சாலை படுமோசம்

திருமயம்,டிச.24: அரிமளம் அருகே பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து ஆலங்குடி வழியாக பெருங்குடி செல்லும் சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் செப்பனிடப்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் அதிகளவு கனரக வாகனங்கள் செல்வதாலும், பராமரிப்பு இல்லாததாலும் சாலையில் ஆங்காங்கே சிறிய அளவில் பள்ளம் ஏபட்டது. இந்நிலையில் அந்த சிறிய பள்ளங்கள் தபோது பெய்த மழையில் பெரிய அளவிலான பள்ளங்களாக மாறியதோடு பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் சாலையில் இருந்து பெயர்ந்த ஜல்லிககள் சாலைமுழுவதும் பரவிகிடப்பதால் சாலையை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதேசமயம் பெருங்குடி, மேனாம்பட்டி, ஆண்டிபட்டி, பூவம்பட்டி, முனசந்தை, மருதம்பட்டி உள்ளிட்ட20க்கும் மேபட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேபட்ட மாணவர்கள் இந்த பழுதடைந்த சாலையை தினந்தோறும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ராயவரத்தில் இருந்து ஆலங்குடி வழியாக பெருங்குடி செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் சாலையை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: