×

தலைவராக தேர்ந்தெடுத்தால் கந்தர்வகோட்டை ஊராட்சியை முன்மாதிரியாக கொண்டு வருவேன் வேட்பாளர் தங்க.திருவாய்மொழி வாக்குறுதி

கந்தர்வகோட்டை, டிச.24: தலைவராக தன்னை தேர்ந்தெடுத்தால் கந்தர்வகோட்டை ஊராட்சியை முன்மாதிரியாக கொண்டு வருவேன் என வேட்பாளர் தங்க.திருவாய்மொழி வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தார்.
கந்தர்வகோட்டை இந்திரா நகர் குமரன் காலனியை சேர்ந்தவர் திருவாய்மொழி(42). இவர் ஏகனவே கந்தர்வகோட்டை ஊராட்சியில் 3 மறும் 4 வது வார்டு உறுப்பினராக இருந்துள்ளார். தபோது கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். தங்க.திருவாய்மொழி ஓய்வு பெற்ற ஆதிதிராவிட மாணவர் விடுதி காப்பாளர் தங்கராஜின் மகனாவார். இந்திரா நகர் குமரன் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெறோர் ஆசிரியர் கழக தலைவராகவும், கிராம கல்வி குழு தலைவராகவும் உள்ளார். 2013ல் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்க தனிகட்டிடம் இல்லாததால் தனது வீட்டின் மாடியில் துவங்க இடம் கொடுத்தது மட்டுமின்றி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கினார்.

இவர் வசிக்கும் பகுதியில் குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு பிரச்னைகளுக்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கொண்டு வரக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டார். கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவராக தன்னை மக்கள் தேர்ந்தெடுத்தால் மக்கள் விரும்பும் அடிப்படை வசதிகளை செய்து தர முன்வருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல் கந்தர்வகோட்டை ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக கொண்டு வருவேன். எனவே ஏணி சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி தேடி தாருங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.

Tags : Kandharvagotte Panchayat ,candidate ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்