×

சீர்காழி அடுத்த மங்கைமடம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளர் பிரசாரம்

சீர்காழி, டிச.24: சீர்காழி அருகே மங்கைமடம் கீழ சட்டநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் செந்தாமரை எம் என் ஆர் ரவி உதயசூரியன் சின்னத்திற்கும், கீழ சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அம்பிகா சேகர் பூட்டு சாவி சின்னத்திற்கும், மங்கைமடம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் நீலமேகம் பூட்டு சாவி சின்னத்திற்கும், மங்கைமடம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எம் என் ஆர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய பிரதிநிதி சீத்தாராமன், ஊராட்சி துணை செயலாளர் ராஜா கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜா பூக்கடை துரை மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : candidate ,DMK ,union councilor ,Sirikazhi ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்