×

தேர்தல் நாளான்று அரசு விடுமுறை

கோவை, டிச. 24: கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் முதற்கட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 27-ந் தேதி மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு), பொள்ளாச்சி(தெற்கு), ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய ஊரக பகுதிகளுக்கு மட்டும் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 30-ந் தேதி அன்று காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய ஊரக பகுதிகளுக்கு அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

மேலும் வாக்குப்பதிவு நாளான 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கு முந்தைய நாள் பணிபுரிந்திருப்பின், மேற்குறிப்பிட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government holiday ,
× RELATED புதுவையில் இன்று அரசு விடுமுறை