×

சென்னை சில்க்ஸில் கிறிஸ்துமஸ் மெகா விற்பனை

நெல்லை, டிச.22: நெல்லை வண்ணார்பேட்டையில் இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸில் கிறிஸ்துமஸ் விற்பனை களை கட்டி உள்ளது. கிறிஸ்துமஸ் விற்பனைக்கு என ஏராளமான புது ரகங்கள் குவிந்துள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டு சேலைகள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி ரேக்குகளில் குவிக்கப்பட்டுள்ளன. தரம் வாரியாக பட்டு சேலைகள் ஒரே இடத்தில் உள்ளதை கண்டு வாடிக்கையாளர்கள் வியக்கின்றனர். கொல்கத்தா பேன்ஸி சில்க்ஸ், வாரணாசி பட்டு சேலைகள், ஜெய்ப்பூர் பேன்ஸி ஒர்க் சில்க் சாரீஸ், பாரம்பரிய காஞ்சிபுரம், ஆரணி சுப முகூர்த்த பட்டு சேலைகள், திருப்புவனம், கும்பகோணனம் விசிறி மடிப்பு பட்டு சேலைகள் என 50ஆயிரத்துக்கும் மேல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் பன் டைம் என பொழுது போக்கு விளையாட்டு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் வயது வித்தியாசமின்றி விளையாடும் வகையில் வீடியோ கேம், சறுக்கு விளையாட்டுகள், கார் ரேஸ், பொம்மை விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், பெரிய கார் ரைடர் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

Tags : Christmas Mega Sale ,Chennai Silks ,
× RELATED சென்னை சில்க்ஸில் கிறிஸ்துமஸ் மெகா விற்பனை