×

மாப்பிள்ளையூரணியில் திமுக தேர்தல் காரியாலயம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தூத்துக்குடி, டிச.22: மாப்பிள்ளையூரணியில் திமுக தேர்தல் காரியாலயத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் 27ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக கூட்டணி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சண்முகையா எம்.எல்.ஏ தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவர் வேட்பாளருமான சரவணக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி 9வது வார்டு வேட்பாளருமான அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வசமானது. அதேபோல் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி சாதனை படைக்கும். ஏனென்றால் வார்டு உறுப்பினர்கள், ஓன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் ஓரே இடத்தில் ஒன்று கூடி ஓற்றுமையாக பிரசாரம் செய்கிறார்கள். இந்த வெற்றியின் மூலம் 2021ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக அடித்தளம் அமைக்கும்’ என்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் வசுமதி அம்பாசங்கர், அந்தோணி தனுஷ்பாலன், கோயில்மணி, ஆனந்தி, முத்துமாலை, மாப்பிள்ளையூரணி வார்டு வேட்பாளர்கள் மகேஸ்வரி, மாரியம்மாள், பாரதிராஜா, லூர்து பாக்கியம், தங்கபாண்டி, சக்திவேல், ஜோஸ்வின்மேரி, வசந்தகுமாரி, தமிழ்செல்வி, பாண்டியம்மாள், காளிஸ், தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிலோமின்ராஜ், பார்வதி, மாவட்ட பிரதிநிதி அஜய்கோஷ், நிர்வாகிகள் ஆரோக்கியமேரி, பொன்னுச்சாமி, அதிர்ஷ்டராஜ், பாஸ்கர், அம்புரோஸ், பொன்பாண்டி, தர்மலிங்கம், ஜோதிடர் முருகன், நெல்சன், குமார், சப்பாணிமுத்து, கணேசன், பால்மணி, ராமர், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அர்ஜுன், ஆறு
முகநயினார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஐயப்பன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துக்குட்டி, எட்வர்ட், மதிமுகவை சேர்ந்த பொன்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜோதிராஜா நன்றி கூறினார்.

Tags : Anitha Radhakrishnan MLA ,DMK ,Mappillai Pooranee ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு