×

கடவூர் அருகே காளையபட்டி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு

கடவூர், டிச. 22: காளையபட்டி கிராமத்தில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
கடவூர் ஒன்றியம் காளையபட்டி ஊராட்சியில் சாலிக்கரை, சின்னாண்டிபட்டி மற்றும் காளையபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. காளையபட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு நிர்மலா மற்றும் ஆரோக்கியமேரி ஆகிய இருவர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் நிர்மலாவின் மனு பெயர் மாற்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆரோக்கியமேரி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இதில் 6 வார்டுகள் உள்ளன. வார்டு 1ல் மஞ்சுளா, சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். வார்டு 2ல் நதியா, வார்டு 3ல் மைக்கேல் பிரகாசம், சுப்பிரமணி, வார்டு 4ல் தாமஸ் ஆல்பர்ட், அழகர்சாமி, வார்டு 5ல் சுதா, முருகம்பாள், சாந்தி, வார்டு 6ல் கருப்பசாமி, வேல்முருகன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் நிர்மலா மனு குளறுபடியால் நிராகரிப்பட்டதை அறிந்த வார்டு எண் 1, 2, 5, 6ல் போட்டியிட்ட 8 வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற மனு அளித்தனர்.
ஆனால் அந்த மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பஞ்சாயத்து அலுவலகத்தை காளையபட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் தகவலறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை. இறுதியில் 1,2,5,6 வார்டுகளில் நின்ற 8 வேட்பாளர்கள் மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை அடுத்த தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலருக்கு காளையபட்டி கிராமத்தில் மட்டும் உள்ள 535 வாக்காளர்களும் வாக்களிக்க போவதில்லை என கூறி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Tags : election ,Kadavur ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...