×

களப்பயிற்சி முகாமில் தகவல் முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் கிராமத்தில் பழமையான பாலத்தில் பெயரளவிற்கு சீரமைப்பு பணி: பொதுமக்கள் அச்சம்

முத்துப்பேட்டை, டிச.22: கற்பகநாதர் கிராமத்தில் பழமையான பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுததுள்ளனர். பதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் ஊராட்சிக்கு உட்பட கற்பகநாதர்குளம் தெற்கு - தொண்டியக்காடு செல்லும் நெடுஞ்சாலை துறை சாலையில் வெட்டாறு குறுக்கே செல்லும் பாலமானது மிகவும் பழமையான பாலமாகும். இவ்வழியாகதான் தொண்டியகாடு உள்ளிட்ட பகுதியை கடந்து செல்லும் கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறனர்.
இந்த பாலத்தில் வழியாக தான் அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட வெளியூர் செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அன்றாடும் இந்த பாலத்தையே பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் இந்த சாலை நெடுவெங்கும் சேதமாகி காணப்பட்டது. அதே போல் இந்த வெட்டாறு பாலமும் பல ஆணடுகளாக சேதமாகி காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி பாலத்தில் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சுகளும் உதிர்ந்து எந்த நேரத்திலும் பெரியளவில் சேதமாக வாய்ப்புகள் உள்ள பழுதடைந்த ஒரு பாலமாக காட்சியளிக்கிறது. இதனை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்ள வில்லை.இந்த ஆபத்தான பாலத்தை இடித்து விட்டு கட்டாத நெடுஞ்சாலை துறையினர் கடந்த சில தினங்களாக பாலத்தில் சேதமான பகுதிகளை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பணிகளும் பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சாமித்துரை கூறுகையில், பாலத்தை கலெக்டர் பார்வையிட்டு உண்மை நிலவரத்தை அறிய வேண்டும். அதே நேரத்தில் இந்த ஆபத்தான பாலத்தை இடித்து விட்டு கட்டவும் பரிந்துரை செய்யவேண்டும் என்றார்.

Tags : bridge ,Karpagnanatharkulam village ,Muthupetty ,
× RELATED திருவரம்பு மாறப்பாடி பாலம் பகுதியில் பட்டுப்போன மரத்தை அகற்ற கோரிக்கை