×

2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் ஊர்க்காவல் படைவீரர் அடம்: அரசு பஸ்சை பாலத்தின் குறுக்கே நிறுத்தினார் டிரைவர்

மணப்பாறை, டிச.21: திருச்சியில் இருந்து நேற்று காலை குமுளிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் வையம்பட்டி வந்தபோது அங்கு ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் ஏறினார். திண்டுக்கல் அல்லது குமுளிக்கு வருவார் என கண்டக்டர் நினைத்துக்கொண்டார். ஆனால் அவர் 10 கி.மீ. தொலைவில் உள்ள நடுப்பட்டிக்கு செல்ல வேண்டும் என கூறினார். இது வெகுதொலைவு செல்லும் பஸ். நடுப்பட்டியில் நிற்காது. வேண்டுமானால் மேம்பாலத்தில் இறங்கிக்கொள்ளுங்கள் என்று கண்டக்டர் கூறினார். சர்வீஸ் ரோட்டுக்கு பஸ்சை கொண்டு செல்ல வேண்டும். நான் அங்கு தான் இறங்குவேன் என ஊர்க்காவல் படை வீரர் தகராறு செய்தார். இதனால் கண்டக்டருக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே வீரர், நடுப்பட்டியில் உள்ள தனது நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து மேம்பாலத்தில் பஸ்சை நிறுத்தும்படி கூறினார். அவர்களும் திரண்டு வந்து பஸ்சை நிறுத்தி டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்தனர். இதனால் டிரைவர் பஸ்சை மேம்பாலத்தில் குறுக்கே நிறுத்திவிட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வையம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக அங்கு வரவில்லை. இந்நிலையில் மற்ற பஸ் ஊழியர்களும், ஊர் மக்களும் பேசி சமரசம் ஆனார்கள். இதனால் 25 நிமிடத்திற்கு பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது.

Tags : gunmen ,Adam: Driver ,bridge ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...