×

குஜிலியம்பாறையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

குஜிலியம்பாறை, டிச. 22: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பயிற்சியில் கலந்து கொண்ட சுமார் 500  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஓட்டு சீட்டுகளை எவ்வாறு கையாள வேண்டும். ஓட்டுப்பதிவு முறைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தேர்தல் அலுவலர் அன்புக்கரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகாதேவி, அண்ணாத்துரை, காண்டிபன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : polling officers ,Kujiliyampara ,
× RELATED குடவாசல் தாலுகாவில் 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி