×

நீர் வழி ஓடைகளில் குப்பை குவியல்

திருப்பூர், டிச.22: திருப்பூர்-தென்னம்பாளையம் செல்லும் கருவம்பாளையம் செல்லும் ஏ.பி.டி ரோட்டில் தனியார் பின்னலாடை நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. நீர் வழி ஓடைகளின் இரு புறமும் ஏராளமான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ளன. முருகம்பாளையம், குளத்துப்பாளையம், சுண்டமேடு உட்பட பல்வேறு பகுதிகளின் வழியாக செல்லும் நீர் வழி ஓடை ஏ.பி.டி ரோடு வழியாக நொய்யல் ஆற்றை வந்தடைகிறது. ஏ.பி.டி. ரோட்டில் இரு பகுதிகளிலுள்ள பின்னலாடை நிறுவனங்கள் ஆடை உற்பத்தியில் ஏற்படும் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களை  நீர் வழி ஓடைகளில் தொடர்ந்து கொட்டி தீ வைத்து எரி்த்து வருகின்றனர். 100 அடி அகலம் உள்ள நீர் வழி ஓடை கழிவுகளை கொட்டி வேன், சரக்கு ஆட்டோ, பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை அழைத்து வரும் வேன்கள்  நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. தற்போது நீர் வழி ஓடை செல்லும் பகுதி முழுவதும் பரவலாக பின்னலாடை கழிவுகள், கட்டிட கழிவுகளை வரிசையாக கொட்டி வருகின்றனர்.

 நீர் வழி ஓடைகளின் அகலம் குறையும் போது மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து உயிர் சேதம், பொருள் தேசம் ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 பேர் மழை நீரில் மூழ்கி இறந்தனர் பல வீடுகள் இடிந்து கீழே விழுந்தது. இதைதொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் போர்க்கால நடவடிக்கையாக நீர் வழி ஓடைகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை அகற்றி அகலப்படுத்தினர்.இதைதொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக நீர் வழி ஓடைகளில் படிப்படியாக குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.    
 நீர் வழி ஓடைகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உயிர்சேதம், பொருள் சேதம் அதிகரிக்கும் நிலை உள்ளது.  எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற  கலெக்டர் உத்தரவிடவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : waterways ,
× RELATED சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு...