×

தளி புறவழிச்சாலை சீரமைப்பு பணி துவக்கம்

உடுமலை, டிச.22: உடுமலையில் இருந்து தளி கிராமத்துக்குள் செல்லாமல், பைபாஸ் ரூட்டில் செல்லும் வகையில் புறவழிச்சாலை உள்ளது. மொடக்குபட்டி, தேவனூர்புதூர் வழியாக இந்த சாலை செல்கிறது. அதிகளவில் இந்த வழியாக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.சமீபத்தில் பெய்த மழைகாரணமாக, இந்த சாலையில் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனத்தில் செல்வோர் அவதிப்பட்டு வந்தனர். தளி கிராமம் வழியாக சென்றால், குறுகலான சாலை காரணமாக  போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, இந்த புறவழிச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். எனவே, சாலையில் முதல் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும். தொடர்ந்து முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றிய செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து, தளி பேரூராட்சி சார்பில், சாலை சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. 600 மீட்டர் தூரத்துக்கு பேவர்பிளாக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.85 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Commencement ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் இன்று...