×

வருசநாடு பகுதியில் ஆய்வுக்குப் பின்னும் இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு கிடைக்கலை பாதிக்கப்பட்டோர் புகார்

வருசநாடு,டிச.19: வருசநாடு பகுதியில் சிங்கராஜபுரம், கோமாளிகுடிசை, காமராஜபுரம், தும்மக்குண்டு, சீலமுத்தையாபுரம், மேல்வாலிப்பாறை, தர்மராஜபுரம், வண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கனமழையால் இடிந்து சேதமடைந்தன.இந்த வீடுகளை மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி வருவாய்த்துறை அதிகாரிகளும், மயிலாடும்பாறை ஒன்றிய அதிகாரிகளும், மாவட்ட திட்ட அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இதுவரையும் இழப்பீடு நிவாரணம் வழங்கப்படவில்லை என குமுறல் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, இன்னும் எங்களுடைய வங்கிக் கணக்கில் இழப்பீடு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டதற்கு பணம் ஏறிவிடும் என்றனர். ஆனால் இதுவரை கைக்கு பணம் கிடைத்தபாடில்லை. எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.


Tags : Victims ,inspection ,houses ,demolished ,
× RELATED கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்...