×

தேவாரம் சுற்றுவட்டார பகுதிகளில் மார்கழி பனியால் தவிக்கும் முதியவர்கள்

தேவாரம், டிச.19: தேவாரம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகாலையில் வாட்டி எடுக்கும் பனியால் முதியவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.தேவாரம், டி.மீனாட்சிபுரம், அழகர்நாயக்கன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, டி.ரெங்கநாதபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை காட்சியளிக்கிறது. இங்கு விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன.இங்கு மானாவாரி கப்பை, சோளம், மொச்சை, பயிரிடப்பட்டுள்ளது. இந்த விவசாய நிலங்களுக்கு அதிக அளவில் காலையில் விவசாயிகள் செல்வார்கள். மானாவரி நிலங்களில் தேவையான பராமரிப்பு பணிகளை செய்துவிட்டு மாலை நேரத்தில் திரும்புவார்கள். மார்கழி தொடங்கிவிட்டது. தற்போதோ நள்ளிரவு முதலே பனி வாட்டி எடுக்கிறது. இதனால் தோட்ட நிலங்களுக்கு அதிகாலையில் செல்வதை விவசாயிகள் தவிர்க்கின்றனர். இதேபோல் காலை நேரங்களில் தேவாரம் - போடி சாலை மற்றும் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள காட்டுப்பாதைகளில் வாக்கிங் செல்வதற்கு அதிகமான அளவில் நடைபயிற்சியாளர்கள் செல்வர்.

தற்போது பனி அதிகம் காணப்படுவதால் வாக்கிங் செல்வதை தவிர்க்கின்றனர். கடந்த 3 நாட்களாக அதிகமான அளவில் பனி காணப்படுகிறது. பாதைகளை மறிக்கும் அளவிற்கு மஞ்சு மூட்டம் காணப்படுவதால் டூவீலர் மற்றும் கார்கள், ஜீப்கள் செல்வதில் பிரச்னை உள்ளது. இதனால் காலை நேரங்களை தவிர்க்கின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்பை அடைகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், `` இயற்கையிலேயே மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள தேவாரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பனி மூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனைத் தவிர்க்க நடைபயிற்சிக்காக செல்வதை முதியவர்கள் குறைந்துள்ளனர்’’ என்றனர்.

Tags : areas ,
× RELATED தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து...