×

மூல வைகையாற்றிலிருந்து வருசநாட்டில் உள்ள கண்மாய்களில் நீர் தேக்க நடவடிக்ைக தேவை விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு, டிச.19: மூல வைகையாற்று தண்ணீரை வருசநாடு பகுதியில் உள்ள கண்மாய்களில் தேக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாய், செங்குளம் கண்மாய், கெங்குளம், பெரியகுளம், கோவிலாங்குளம், அம்மாகுளம், கடமான்குளம், சாந்தன் ஏரிகண்மாய், பரமசிவன் கோவில் கண்மாய், புதுகுளம் கண்மாய், இலந்தைகுளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவற்றில் சில கண்மாய்கள் கனமழையால் நிரம்பியுள்ளன. சில கண்மாய்களில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது.எனவே, மூல வைகையாற்றில் இருந்து கால்வாய் அமைத்து இந்த 12 கண்மாய்களுக்கும் தண்ணீரை நிரப்பினால் இப்பகுதியில் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் பஞ்சம் நீங்கும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து கண்டமனூரை சேர்ந்த அங்குசாமி கூறுகையில், ‘‘சில கண்மாய்களை பொதுமக்கள் வரி வசூல் செய்து தூர்வாரி உள்ளனர். மேலும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாய்களை தூர் வாரி கரைகளை பலப்படுத்தி, மூல வைகையாற்று நீரை தேக்கினால் கடமலை மயிலை ஒன்றியத்தில் எப்போதும் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. இதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் முதியவர் சாவு?