×

போக்சோவில் தண்டனை பெற்றுத்தர வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும் நீதிபதி பேச்சு

சிவகங்கை, டிச.19: போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுதரவும் வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும் என நீதிபதி பேசினார். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு அமர்வு நீதிபதி செம்மல் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் சட்ட உதவி கிடைக்க வேண்டும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் மக்களுக்கு சட்ட உதவி கிடைத்திடவும், போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுதரவும் வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு பேசினார். பயிற்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ரஃபி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராஜேஸ்வரி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பாரதி, பாரததேவி, மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
 

Tags : Prosecutors ,judge ,
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...