×

டெங்கு விழிப்புணர்வு முகாம்

ஒட்டன்சத்திரம், டிச.19: ஒட்டன்சத்திரம் இந்திய மருத்துவ கழகம், இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் வினாடி வினா போட்டி கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஹெரால்டு ஜாக்சன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பிரிட்டோ தலைமை தாங்கி வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்திய மருத்துவ கழக செயலாளர் ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் பரவும் விதம் குறித்தும் அதைத் தடுக்கும் முறைகள் மற்றும் சிகிச்சை பற்றியும் பேசினார். இந்த முகாமில் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் இஸ்மத் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் மெக்கானிக்கல் துறை தலைவர் நாச்சிமுத்து நன்றி கூறினார்.

Tags : Dengue Awareness Camp ,
× RELATED தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்