×

வத்தலக்குண்டு அருகே திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வத்தலக்குண்டு டிச.19: வத்தலக்குண்டு அருகே திமுக ஊராட்சி ஒன்றிய சேர்மன் வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஜி.தும்மலப்பட்டி, கணவாய்பட்டி ஒன்றியத்திற்கான ஒன்றிய கவுன்சிலர் திமுக சேர்மன் வேட்பாளர் பரமேஸ்வரிமுருகன் தும்மலப்பட்டி மெயின்ரோடு, கிழக்கு தெரு, வடக்கு தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் திமுக நிர்வாகிகள் சிதம்பரம், பேக்கரிமுருகேசன், பாண்டி, கவியரசு, ஜெயராஜ், மனோகரன், ராஜ்குமார், சகாபுதீன், கார்த்திக் உள்பட ஏராளமானோர் சென்றனர். வேட்பாளரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags : DMK ,candidate polling ,Vattalakunda ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்