×

ராஜகிரியில் திமுக கூட்டம்

பாபநாசம், டிச. 19: பாபநாசம் அடுத்த ராஜகிரியில் திமுக சார்பில் ஊராட்சி கூட்டம் நடந்தது. பாபநாசம் ஒன்றிய அவைத்தலைவர் யூசுப் அலி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாட்ஷா முன்னிலை வகித்தார். மீனவரணி புகழேந்தி வரவேற்றார்.கூட்டத்தில் ஒன்றியக்குழு 20 வார்டில் போட்டியிடும் அனீஸ்பேகம் முகமது பாரூக், 21வது வார்டில் போட்டியிடும் ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற அயராது பாடுபடுவது. மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்கும் வரை ஓய்வின்றி உழைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்டப்டன. மேலும் ராஜகிரி 4வது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்ட ஒஜீர் பீவி ஜாஹீர் உசேனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி துணை செயலாளர் ரகமதுல்லா நன்றி கூறினார்.

Tags : DMK ,meeting ,Rajagiriya ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்