×

வேளாண் அதிகாரி ஆலோசனை காசி விசுவநாதர், சோமநாதர் லிங்க தரிசன நிகழ்ச்சி

கரூர், டிச. 19: கரூர் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா அமைப்பின் சார்பில் காசி விசுவநாதர் மற்றும் சோமநாதர் லிங்க தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.பசுபதிபாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காசி விசுவநாதர் மற்றும் சோமநாதர் லிங்கங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீப தியான (திருவிளக்கு பூஜை) நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இந்த அமைப்பின் சார்பில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ராஜயோக தியான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த வளாகத்தில், அறிவியலும், ஆன்மீகமும் குறித்தான கண்காட்சி, நாட்டிய நிகழ்ச்சி, அஷ்ட தேவதைகளின் காட்சிகள் போன்றவையும் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kasi Viswanathan ,
× RELATED பழங்காமூர் காசி விஸ்வநாதர்