×

கரூர் பேருந்து நிலைய பகுதியில் காவலன் செயலி டவுன்லோடு செய்ய முகாம் அமைப்பு

கரூர், டிச. 19: கரூர் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காவல்துறை சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் செயலியை பொதுமக்கள் டவுன்லோடு செய்து கொள்ளும் வகையில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.ஆபத்தில் உள்ள பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினர்களும் உடனுக்குடன் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த செயலி குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாக மையப்பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிஎஸ்பி சுகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இந்த காவலன் செயலியை செல்போனில் எவ்வாறு டவுன்லோடு செய்வது, அதன் பயன் என்ன என்பது குறித்தான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், 18ம்தேதியில் இருந்து ஒரு வாரம் வரை பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வந்து செல்லும் அனைத்து தரப்பினர்களுக்கும் இலவசமாக இந்த செயலியை டவுன் லோடு செய்து தரும் வகையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.காவலன் செயலியை டவுன்லோடு செய்வதோடு, அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு போலீசார் நேற்று விளக்கமளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : bus stand ,Karur ,
× RELATED கரூர் பஸ் நிலையம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு