×

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் கடும் நடவடிக்கை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

மன்னார்குடி, டிச.19: கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் (பொ ) ராஜகோபால் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு: நகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ஏராளமான கால்நடைகள் தன்னிச்சையாக சுற்றி திரிகின்றன.இதனால் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சில நேரங்களில் உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு அபாயகரமான விபத்துகள் நடக்கிறது. சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடை களை சாலைகளில் திரிய விடக்கூடாது என்பதை வலியுறுத்தி நகராட்சி ஏற்கனவே பலமுறை வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. ஆட்டோ மூலம் பிரச்சாரமும் நடைபெற்றது.

ஆனால் நகராட்சியின் இத்தகைய நடவடிக்கைகளை சிலர் வேண்டுமென்றே உதாசீனம் படுத்தி தொடர்ந்து தங்களின் கால்நடைகளை சாலைகளில் திரிய விடுவது ஏற்புடையதல்ல. எனவே கால்நடை வளர்ப்போர் வரும் 22 ம் தேதிக்குள் தங்களின் கால்நடைகளை சாலைகளில் சுற்றித் திரிய விடாமல் வீடுகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.கேடு காலத்திற்கு மேல் கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின் படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும் நகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு வேதாரண்யம் காட்டு பகுதிகளில் விடப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Caution owners ,municipality ,Koothanallur ,roads ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...