×

பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எச்சரிக்கை ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ஜெயங்கொண்டம்,டிச.19: ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உள்ளாட்சி தேர்தல் அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 976 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக 30ம் தேதியன்று 495 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வாக்கு எண்ணும் மையமான தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வாக்கு எண்ணும் மையமான விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தேர்தல் பார்வையாளர் ராஜசேகர் கூறும்போது:மேஜைகள் அமைத்தல் மற்றும் தடுப்புகள் அமைத்தல், மழைநீர் புகாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பணிகளை பொறியாளர்கள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கப்படும். பேரிகேட் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், வேட்பாளர்களின் முகவர்கள் வரும் வழி அமைத்தல், வாக்கு எண்ணிக்கையை உடனுக்குடன் ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்துதல் செய்வதற்கான பணிகள் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.ஆய்வின்போது, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காவல்துறையினர், வளர்ச்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : District Principal Session Judge ,Perambalur Mahla Court Decision ,
× RELATED மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏடிஎம்...