×

டவுன்ஹால் சாலையில் கழிவுநீர் தேக்கத்தால் கடும் தூர்நாற்றம்

திருப்பூர், டிச.19: திருப்பூரின் மைய பகுதியில் டவுன்ஹால் மைதானம் அமைந்துள்ளது.  டவுன்ஹால் பகுதியிலிருந்து மதுரை, கரூர், திருச்சி, மணப்பாறை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகளும், அதேபோல் நகர் பகுதியில் பல ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் இந்த வழியாக பயணிக்கிறது. இதில் டவுன்ஹால் பகுதியிலிருந்து பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்களின் மூலம் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் டவுன்ஹால் பஸ் ஸ்டாப் அருகே பல்வேறு பகுதிகளில் சேகரமாகக்கூடிய கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : downpour ,Townhall Road ,
× RELATED அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்